தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'Heart of amaran'... அமரன் படத்தில் சாய் பல்லவியின் மனதை வருடும் ப்ரோமோ வெளியீடு! - Amaran sai pallavi promo - AMARAN SAI PALLAVI PROMO

Amaran sai pallavi promo: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள 'அமரன்' படத்தின் சாய் பல்லவி கதாபாத்திர வீடியோ வெளியாகியுள்ளது.

அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி
அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி (Credits - Raaj Kamal Films International X account)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 27, 2024, 12:37 PM IST

சென்னை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அமரன் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் முகுந்த் வரதராஜனாக கட்டுமஸ்தான உடல்வாகுடன், ஆக்ரோஷமான கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

அமரன் படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இன்று சாய் பல்லவி கதாபாத்திர வீடியோவை அமரன் படக்குழு வெளியிட்டுள்ளது. Indhu rebecca varghese என்ற கதாபாத்திரத்தில் சாய் பல்லவி இப்படத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: வெளியானது ’தேவரா’... சென்னை திரையரங்கில் ரசிகர்களுடன் படத்தை கொண்டாடிய அனிருத்! - Devara release Celebrations

இந்த ப்ரோமோ வீடியோவில் முதலில் முகுந்த் வரதராஜனின் மனைவி தோன்றுகிறார். அவர் குடியரசு தினத்தன்று தனது மறைந்த கணவர் மேஜர் முகுந்த் வரதராஜன் சார்பாக விருது வாங்குகிறார். அதனை தொடர்ந்து சாய் பல்லவி சிவகார்த்திகேயனை காதலிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவின் இறுதியில் "இக்கடலுக்கும் ஆகாசத்திற்கும் இடையில் உள்ள தூரம் எனக்கும், அவனுக்கும்" என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த அமரன் படத்தின் சாய் பல்லவி கதாபாத்திர வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details