சென்னை: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள படத்தை, ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஆக்ஷன் கலந்த படமாக உருவாகும் இப்படத்திற்கு, சமீபத்தில் பூஜை நடைபெற்றது.
இதில் படக்குழுவினர் மற்றும் திரையுலக விருந்தினர்கள் கலந்து கொண்டனர். படத்திற்கு போடப்பட்ட பூஜை புகைப்படங்களை ஏ.ஆர்.முருகதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (பிப்.15) பதிவிட்டுள்ளார். இப்படத்தில், நடிகை ருக்மணி வஸந்த் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளைக் கவனிக்கிறார். அருண் வெஞ்சரமுது கலை இயக்கம் செய்கிறார். சண்டைக் காட்சிகளை மாஸ்டர் திலீப் சுப்புராயன் வடிவமைக்கவுள்ளார். இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் முழு விவரங்கள் ஒவ்வொன்றாக, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.