சென்னை:ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'கங்குவா'. பிரமாண்ட பொருட்செலவில் உருவகியுள்ள படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஏழாம் அறிவுக்கு பிறகு சூர்யா திரை வாழ்வில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படமாக 'கங்குவா' அமைந்துள்ளது.
இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது. ‘கங்குவா’ படத்தின் புரமோஷன் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள படக்குழு, ஏற்கனவே நடிகர் சூர்யா பிறந்தநாளுக்கு 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' என்ற பாடலை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து ‘கங்குவா’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.