சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவருக்கு சில குறிப்பிடத்தக்க வெற்றி எதுவும் கிடைக்காமல் இருந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் நடித்த ஜிகர்தண்டா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது.
அதன்பிறகு, சமீபத்தில் வெளியான சித்தா திரைப்படம் மீண்டும் சித்தார்த்துக்கு பெரும் வெற்றியை அளித்த படமாக அமைந்தது. இந்த நிலையில், 7 MILES PER SECOND நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ முதல் முறையாக தயாரிக்கும் படத்திற்கு “மிஸ் யூ” என்று பெயர் வைத்துள்ளார்.
இப்படத்தில் கதாநாயகனாக சித்தார்த் நடிக்கிறார். இதில், தெலுங்கு, கன்னடத்தில் புகழ்பெற்ற ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். மாப்ள சிங்கம், களத்தில் சந்திப்போம் போன்ற கமர்ஷியல் படங்களை இயக்கிய N.ராஜசேகர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை காதல், ஆக்சன், காமடி என முழுநீள பொழுதுப்போக்கு படமாக உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.