தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாருக்கான்.. தற்போதைய நிலை என்ன? - Shah Rukh Khan in Hospital - SHAH RUKH KHAN IN HOSPITAL

Shah Rukh Khan: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

ஷாருகான் புகைப்படம்
ஷாருகான் புகைப்படம் (credits - ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 9:21 PM IST

ஹைதராபாத்: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அகமதாபாத்தில் உள்ள கேடி (KD Hospital) மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மதியம் 1 மணி அளவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தற்போது ஷாருக்கானின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், உடல்நிலை குணமடைய போதுமான ஓய்வெடுக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

முன்னதாக, நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் குவாலிபையர் ஐபிஎல் போட்டியைக் காண்பதற்காக நடிகரும், கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கான், நரேந்திர மோடி மைதானத்திற்கு தனது குடும்பத்துடன் வந்தார்.

இப்போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நேரடியாக இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையையும் பெற்றது. இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களுக்கு ஐடிசி நர்மதா ஹோட்டலில் சிறப்பான வரவேற்பு கொடுத்தார் ஷாருக்கான்.

இந்நிலையில், இன்று மதியம் திடீரென உடல் உச்ச வெப்பநிலையால் (dehydration) பாதிக்கப்பட்டு, கேடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அகமதாபாத் காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் ஜாட் கூறினார். கடந்த வருடம் இவரது நடிப்பில் பதான், ஜவான், டன்கி என 3 படங்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அனிருத்தின் கம்பேக் மியூசிக்கில் வெளியானது இந்தியன் 2 படத்தின் ப்ர்ஸ்ட் சிங்கிள் பாரா! - Indian 2 First Single Paaraa

ABOUT THE AUTHOR

...view details