சென்னை: இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'குபேரா'. இது தனுஷின் முதல் தெலுங்கு திரைப்படமாகும். தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் குபேரா திரைப்படம் வெளியாகிறது.
விஜய் நடித்த ’வாரிசு’ படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. குபேரா படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். சாய் பல்லவி நடித்த fidaa, love story உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் தனுஷ் நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் முன்னதாக தமிழ் தெலுன்ம்க்கு ஆகிய மொழிகளில் நடித்த வாத்தி திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் குபேரா படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தனுஷ் கவனம் பெறுகிறார். மேலும் இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குபேரா படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.