தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நாளை வெளியாகிறது ராயன் படத்தின் இரண்டாம் பாடல்! - RAAYAN Second Single

Raayan Movie: நடிகர் தனுஷ் நடித்து இயக்கியுள்ள ராயன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ராயன் படத்தின் புகைப்படம்
ராயன் படத்தின் புகைப்படம் (Credits: sun pictures 'x' page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 3:49 PM IST

சென்னை: நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என பன்முகத்திறமை வாய்ந்தவர். இவரது நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. தற்போது தெலுங்கில் குபேரா என்ற ஒரு படம், இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படம் என பிஸியாக உள்ளார்.

இந்நிலையில், தற்போது ராயன் என்ற படத்தை நடித்து இயக்கியுள்ளார். முன்னதாக ராஜ்கிரண், ரேவதி நடித்த ப.பாண்டி என்ற படத்தை இயக்கி அதில் தனுஷ் நடித்திருந்தார். படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது தனது 50வது படமாக ராயன் படத்தை இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் 'ராயன்' படத்தில் எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், செல்வராகவன், அபர்ணா முரளி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் பாடலான 'அடங்காத அசுரனோட ஆட்டம் ஆரம்பம்' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்பாடலை தனுஷ் எழுதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனுஷ் இணைந்து பாடியுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை (மே 24) வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடல் சந்திப் கிஷன், அபர்ணா பாலமுரளி சம்பந்தமானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. படம் அடுத்த மாதம் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தனுஷ் இயக்கத்தில் வெளியாக உள்ள இரண்டாவது படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து.. அதிகாரிகள் விசாரணை! - Chennai Airport Fire Accident

ABOUT THE AUTHOR

...view details