தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

எஸ்.ஏ.ஜி விருதுகள் 2024: விருதுகளை அள்ளி குவித்த ஓம்பன்ஹைமர்.. முழுப் பட்டியல் விவரம் இதோ! - பார்பி படம்

SAG Awards 2024: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகள் (Screen Actors Guild Awards) விழாவில் ஓம்பன்ஹமர் திரைப்படம் அனைத்துப் பிரிவுகளிலும் விருது பெற்றுள்ளது.

SAG Awards 2024
SAG Awards 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 10:32 PM IST

ஹைதராபாத்:2024ம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் மார்ச் மாதம் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் 30வது ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகள் (Screen Actors Guild Awards) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று (இந்தியா நேரத்திற்கு இன்று காலை) நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நெட்பிளிக்ஸ் (Netflix) ஒளிபரப்பப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியைப் பார்வையாளர்கள் காணும் வகையில் நெட்பிளிக்ஸில் 28 நாட்களுக்கு ஒளிபரப்பப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்டோபர் நோலனின் ஓபன்ஹைமர் (Oppenheimer) திரைப்படம் அதிக விருதுகளைத் தட்டிச் சென்றுள்ள நிலையில் ஆஸ்கார் விருதினைப் பெறும் வாய்ப்பினைப் பெறுகிறது. பாலிவுட் நட்சத்திரங்களான மெரில் ஸ்ட்ரீப், அன்னே ஹாத்வே, எமிலி பிளண்ட் மற்றும் பில்லி எலிஷ் ஆகியோர் பங்கேற்று விருதினை வழங்கினர்.

2024ம் ஆண்டுக்கான SAG விருது வெற்றியாளர்கள் பட்டியல்:படத்தில் நடிகர்களின் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்திய பட்டியலில் ஓப்பன்ஹைமர் திரைப்படம் பெற்றுள்ளது. சிறந்த ஆண் நடிகருக்கான விருதினை ஓப்பன்ஹைமர் படத்தின் சிலியன் மர்பி (Cillian Murphy) பெற்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதினை கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் (Killers of the Flower Moon) படத்திற்காக லில்லி கிளாட்ஸ்டோன் (Lily Gladstone) பெற்றார்.

மேலும், சிறந்த துணை நடிகருக்கான விருதை ராபர்ட் டவுனி ஜூனியரும் (Robert Downey Jr), சிறந்த துணை நடிகைக்கான விருதினை எமிலி பிளண்ட் (Emily Blunt) ஆகியோர் ஓபன்ஹைமர் படத்திற்காகப் பெற்றனர். நாடகத் தொடரில் சிறந்த நடிகருக்கான விருதினை பெட்ரோ பாஸ்கல் (Pedro Pascal), தி லாஸ்ட் ஆஃப் அஸ் (The Last of Us) திரைப்படத்திற்காகப் பெற்றார்.

நாடகத் தொடரில் சிறந்த நடிகைக்கான விருதினை தி க்ரவுன் (The Crown) படத்திற்காக எலிசபெத் டெபிக்கி (Elizabeth Debicki) பெற்றார். சிறந்த நகைச்சுவை படத்திற்கான விருதினை தி பியர் (The Bear) திரைப்படம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:பிரம்மயுகம், மஞ்சுமெல் பாய்ஸ் வரிசையில் மலையாள சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் பிரேமலு!

ABOUT THE AUTHOR

...view details