தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்' பாகம் 2 படத்தின் டைட்டில் டீசர் வெளியானது! - Chiyaan 62 title teaser out - CHIYAAN 62 TITLE TEASER OUT

Veera Dheera Sooran Part 2 Title Teaser: இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்' படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Veera Dheera Sooran Part 2 Title Teaser
Veera Dheera Sooran Part 2 Title Teaser

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 7:32 PM IST

சென்னை:தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் தனது 62வது திரைப்படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார். 62வது படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். ரியா ஷிபு இந்த படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தில் விக்ரம் உடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். விக்ரம் பிறந்தநாளான இன்று (ஏப்.17), அவரது 62வது படத்திற்கு 'வீர தீர சூரன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு டீசர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த டீசரானது, படத்தின் ஒரு பகுதியில் வர இருக்கும் காட்சியாக இருக்கலாம் என ரசிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இந்த வீடியோவில் விக்ரமை கொலை செய்ய ஒரு கும்பல் அவர் வேலை பார்க்கும் கடைக்குச் செல்கிறது. இதையறிந்த விக்ரம், அந்த கும்பலை தான் மறைந்து வைத்திருந்த துப்பாக்கியால் தாக்குகிறார். அப்போது வரும் ஜி.வி.பிரகாஷின் இசையானது வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த டீசரானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும், தற்போது இரண்டாவது பாகம் உருவாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, படத்தின் முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. அந்த வகையில், வீர தீர சூரன் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது. முன்னதாக, இந்த படத்தின் அறிவிப்பு கடந்த அக்டோபரில் ஒரு ப்ரோமோ வீடியோவுடன் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஜெயிலர் 2 எப்போது? - வசந்த் ரவி கூறிய முக்கிய அப்டேட்! - Vasanth Ravi About Jailer 2

ABOUT THE AUTHOR

...view details