சென்னை :இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சமீபத்தில் இவரது இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதில், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஞானவேல், ரித்திகா சிங் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
மேடையில் பேசிய இயக்குநர் ஞானவேல், "இந்த சந்திப்புக்கு முக்கிய காரணம் நன்றி அறிவித்தல் தான். நம்பிக்கையில் தான் இது தொடங்கியது. நன்றியில் தான் இது முடிய வேண்டும். என்மீது நம்பிக்கை வைத்து ஜெய்பீம் படத்துக்கு பிறகு கன்டென்ட் உள்ள படம் பண்ண வேண்டும் என்ற ஆர்வத்துடனும், ஈடுபாடுடனும் என்னை முதலில் இந்த படத்துக்கு அழைத்த நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி. அவர் இல்லை என்றால் இந்த பயணம் இல்லை.
இதையும் படிங்க :நியூ லுக்கில் நாக சைதன்யா - சோபிதா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!