சென்னை: 2025 ஆம் ஆண்டு நடைபெறும் 97வது ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதி பரிந்துரைத்து பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில், லைவ் ஆக்ஷன் குறும்பட பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த குறும்படமான அனுஜா இடம்பெற்றுள்ளது.
ஆஸ்கர் விருதுகளுக்கான மொத்த பிரிவுகளுக்குமான இறுதிப்பட்டியல் இன்று மாலையில் இருந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் LIVE ACTION SHORT FILM பிரிவில் 180 குறும்படங்களுடன் போட்டியிட்டு இறுதி பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது இந்திய குறும்படமான அனுஜா. ஆடம் ஜெ கிரேவ்ஸ் (Adam J. Graves) இயக்கியுள்ள இந்த குறும்படம் குழந்தை தொழிலாளர்கள் பிரச்சனையை பற்றி பேசுகிறது.
இப்போது ஆஸ்கர் மீது இந்தியாவிற்கு இருக்கும் ஒரே நம்பிக்கை இந்த குறும்படம் மட்டுமே. காரணம் இந்தியா சார்பில் அனுப்பட்ட முழுநீளத் திரைப்படமான 'லாபடா லேடிஸ்' (Laapataa Ladies) ஆஸ்கர் குழுவால் தேர்வு செய்யப்படவில்லை. கான்ஸில் விருது வென்ற மிகவும் எதிர்பார்த்த 'ஆல் வி இமாஜின் அச் லைட்' (All We Imagine as Light) திரைப்படமும் தேர்வு செய்யப்படவில்லை.