சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான தங்கலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
அதே நேரத்தில், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. இந்நிலையில், தங்கலான் திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் கிட்டத்தட்ட ரூ.50 கோடி வரை வசூல் செய்துள்ளது. பிரபல சினிமா இணையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, 5 நாட்களில் இந்திய அளவில் 31.9 கோடி ரூபாயும், உலக அளவில் 48.50 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில் 5 நாட்களில் தங்கலான் திரைப்படம் மொத்தமாக 25.65 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் மொத்தமாக 5.6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. கேரளாவில் 2.4 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. கடந்த வார இறுதி நாட்கள் விடுமுறை என்பதால், தங்கலான் படத்தை அதிகம் பேர் பார்த்த நிலையில், நேற்று வேலை நாளில் தமிழில் 18.47 சதவீதம் பேர் பார்த்துள்ளனர்.