சென்னை: ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் நஷ்ட தொகையை நெல்சன் விநியோகஸ்தர்களுக்கு கொடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ரஜினி ’ஜெயிலர்’. இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. நெல்சன் தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகி வருகிறார்.
இயக்குநர் நெல்சன் திலீப் குமார் ’Filament Pictures' தயாரிப்பில் ப்ளடி பெக்கர் திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி வெளியானது. கவின் கதாநாயகனாக நடித்த இப்படத்தை நெல்சனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சிவபாலன் இயக்குயிருந்தார். இப்படத்திற்கு டாடா படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்ற ஜென் மார்ட்டின் இசையமைத்திருந்தார்.
டார்க் காமெடி ஜானரில் எடுக்கப்பட்ட ’ப்ளடி பெக்கர்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படம் மொத்தமாக ரூ.8 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தை தயாரித்த நெல்சனுக்கு ஓடிடி, டிவி உரிமை விற்றதில் லாபகரமான படமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு இப்படம் மிகப் பெரிய நஷ்டத்தை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.