தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நலன் குமாரசாமி - கார்த்தி கூட்டணியில் உருவாகும் ‘கார்த்தி 26’ பூஜை வீடியோ வெளியீடு! - கார்த்தி 26 தொடக்க விழா வீடியோ

Production No 27 Pooja: நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் பூஜை விழா வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

கார்த்தி 26
கார்த்தி 26

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 9:56 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான கார்த்தி, தனது தனித்துவமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். நடிப்பு தவிர்த்து, விவசாயிகள் நலனை மேம்படுத்த உழவன் ஃபவுண்டேஷன் என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். கார்த்தியின் 25வது படமான 'ஜப்பான்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது நடிகர் கார்த்தி, நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இது கார்த்தியின் 26வது படமாக உருவாகி வருகிறது. தற்காலிகமாக 'கார்த்தி 26' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பூஜை விழா வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் 'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' ஆகிய படங்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. கார்த்தி 26 படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மேலும், படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

கதை சொல்லும் உத்தியில் புதிய பாணியை பின்பற்றி வெற்றி பெற்ற படைப்பாளியான நலன் குமாரசாமி இயக்கத்தில், முதன் முதலாக கார்த்தி இணைந்திருப்பதால், இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மஹத், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள 'காதலே காதலே' படப்பிடிப்பு நிறைவு!

ABOUT THE AUTHOR

...view details