தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ரசிகர்களுடன் கோட் படம் பார்த்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா! - yuvan watched goat movie - YUVAN WATCHED GOAT MOVIE

yuvan watched goat movie: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, மதுரவாயலில் உள்ள ஏஜிஎஸ் தியேட்டரில் படம் பார்த்து ரசித்தார்.

கோட் படம் பார்த்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா
கோட் படம் பார்த்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 12:44 PM IST

சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'கோட்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று வெளியான கோட் படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

கோட் படம் பார்த்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரவாயல் பகுதியில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் 30 அடி உயர விஜய் கட்அவுட்டிற்கு மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்க விஜய் ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தை பார்ப்பதற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மதுரவாயல் பகுதியில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கம் வந்தார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த கோட் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் கோட் படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கோட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், த்ரிஷா ஆகியோர் ஒரு சில காட்சிகளில் தோன்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கோட் படம் பார்ப்பதற்கு முன் 2023இல் நடைபெற்ற சிஎஸ்கே, மும்பை ஐபிஎல் போட்டியை பார்த்துவிட்டு வருமாறு வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:விநாயகர் சிலையில் உருவான கோட் விஜய்.. ஓவிய ஆசிரியர் செல்வம் அசத்தல்! - Goat vinayagar

ABOUT THE AUTHOR

...view details