சென்னை: இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது. இந்தப் படம் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தமிழ்நாட்டின் கொடைக்கானல் சுற்றுலாப் பகுதியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது மஞ்சும்மல் பாய்ஸ் படம். இந்தப் படத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி எஸ்.பொடுவால், லால் ஜூனியர், தீபக் பரம்போல், அபிராம் ராதாகிருஷ்ணன், அருண் குரியன், காலித் ரஹ்மான், சந்து சலீம்குமார், ஷெபின் பென்சன், மற்றும் விஷ்ணு ரெகு உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.
மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் உலக அளவில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. கடந்த 2018ஆம் ஆண்டிற்குப் பிறகு, மலையாள சினிமாவில் அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற சிறப்பை மஞ்சும்மல் பாய்ஸ் பெற்றது. மஞ்சும்மல் பாய்ஸ் படமானது, தமிழ், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
மஞ்சும்மல் பாய்ஸ் படம்: கேரளாவைச் சேர்ந்த இளைஞர் குழுவினர், தமிழ்நாட்டின் கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்கிறார்கள். அந்தப் பயணத்தின் போது, குணா குகையைப் பார்வையிடுகிறார்கள். அப்போது ஒருவர் தவறி குகைக்குள் விழுந்துவிட, நண்பனைக் காப்பாற்றப் போராடுகிறார்கள். அவர்கள் நண்பனைக் காப்பாற்றினார்களா என்பது தான் மஞ்சும்மல் பாய்ஸ் படம்.
இதையும் படிங்க:"முகத்தின் முன் துப்பாக்கியை நீட்டிய ED.. கண் கலங்கினேன்" - இயக்குனர் அமீர் பேச்சு! - Director Ameer