தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வேட்டையன் டப்பிங்கை தொடங்கிய மஞ்சு வாரியர்! - Manju Warrier Vettaiyan dubbing - MANJU WARRIER VETTAIYAN DUBBING

Manju Warrier: ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகை மஞ்சு வாரியர் தொடங்கியுள்ளார்.

Manju
மஞ்சு வாரியர் மற்றும் வேட்டையன் பட போஸ்டர் (Credits - Lyca Productions 'X' Page)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 28, 2024, 10:18 PM IST

சென்னை: இயக்குநர் டி.ஜே.ஞானவேல், தனது ஜெய்பீம் படம்‌ மூலம் பிரபலமானவர். இவர் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் என நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள வேட்டையன் திரைப்படம், வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜெய்பீம் திரைப்படம் உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்டது என்பதால், இந்த படம் எதுமாதிரி படமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதே நாளில், சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'கங்குவா' திரைப்படமும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதால், கோலிவுட்டில் பல மாதங்களுக்குப் பிறகு இரு பெரும் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இரண்டு படங்களில் ஒரு படம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில், வேட்டையன் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ளதை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.

இந்த நிலையில், நடிகை மஞ்சு வாரியர் இப்படத்துக்கான தனது டப்பிங் பணியை தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதில், வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மஞ்சு வாரியர் தமிழில் அசுரன், துணிவு ஆகிய படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவரப்பட்டார்.

இதையும் படிங்க:கங்குவா பட வெளியீடு தள்ளிப்போகிறதா? வெளியான பிரத்யேக தகவல்!

ABOUT THE AUTHOR

...view details