சென்னை: லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் என நட்சித்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. ஜெய்பீம் படத்தை இயக்கி பெரிய அளவில் பேசப்பட்ட இயக்குநர் டி.ஜே.ஞானவேல் ரஜினிகாந்துடன் இணைந்துள்ளதால் இக்கூட்டணிக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு முன்னதாக அறிவிப்பு வெளியிட்டது. அதே நேரத்தில் வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பெரிதும் எதிர்பார்க்கப்படும் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'கங்குவா' திரைப்படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 19) வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என லைகா புரொடக்ஷன்ஸ் படக்குழு அறிவித்துள்ளது.
வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் வேட்டையன், கங்குவா கோலிவுட்டின் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியை ஆழ்த்தியுள்ளது.
கங்குவா படத்தின் தயாரிப்பாளர் டி.ஜே.ஞானவேல் ராஜா சமீபத்தில் பேட்டி ஒன்றில், நான் தீவிர ரஜினி ரசிகன், அவர் பிறந்தநாளுக்கு கோயிலுக்கு சென்று வழிபடுவேன் என்றும், பெரும்பாலும் கங்குவா படம் வேட்டையன் படத்துடன் ரிலீசாவதை விரும்ப மாட்டோம் என கூறியிருந்தார். முன்னதாக ரஜினிகாந்த் நடித்த பேட்ட, அஜித் நடித்த விஸ்வாசம் கடந்த 2019 ஜனவரி 10ஆம் தேதி ஒரே நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ரூ.20 லட்சம் வாடகை பாக்கி? ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு யுவன் சங்கர் ராஜா நோட்டீஸ்! - yuvan shankar raja house rent issue