சென்னை : தமிழ் சினிமாவில் வாராவாரம் நிறைய படங்கள் வெளியாவது வழக்கம். கடந்த 5ம் தேதி இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடித்த தி கோட் திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்று வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் ஏராளமான படங்கள் வெளியாக உள்ளது.
இந்த வாரம் மட்டும் 6 படங்கள் வெளியாக உள்ளன.
கோழிப்பண்ணை செல்லதுரை : சீனு ராமசாமி இயக்கத்தில் ஏகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கோழிப்பண்ணை செல்லதுரை. அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. சீனு ராமசாமியின் வழக்கமான மனித உணர்வுகளை பேசும் படமாக இது இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
லப்பர் பந்து :தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் லப்பர் பந்து. இதுவும் ஒரு கிரிக்கெட் தொடர்பான படம்தான். இதில், மாமனார், மருமகனுக்குள் கிரிக்கெட் போட்டியில் உள்ள ஈகோ பற்றி சொல்லியுள்ளனர். அத்துடன் காதல், சாதிய ஏற்றத்தாழ்வு எப்படி விளையாட்டில் ஊடுருவியுள்ளதையும் சொல்கிறது இப்படம்.