சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'லால் சலாம்'. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை(பிப்.9) திரையரங்குகளில் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் லவ்வர். இத்திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஸ்ரீகெளரி பிரியா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஆண், பெண் உறவு சார்ந்த படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் நாளை(பிப்.9) திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த ஆண்டு மணிகண்டன் நடிப்பில் குட்நைட் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தி உள்ளது.