தமிழ்நாடு

tamil nadu

ஆஸ்கர் விருது சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ’Laapataa ladies’ - Laapataa ladies for oscars 2025

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

Laapataa ladies for oscars 2025: ஆஸ்கர் விருது 2025 சிறந்த வெளிநாட்டு திரைப்படம் பிரிவில் பாலிவுட்டில் வெளியான Laapataa ladies திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

லாபாடா லேடிஸ் போஸ்டர்
லாபாடா லேடிஸ் போஸ்டர் (Credits - ETV Bharat)

ஹைதராபாத்: உலக அளவில் மிகவும் பிரபலமான ஆஸ்கர் விருதிற்கு இந்தியா சார்பில் இந்த வருடம் 'லாபாடா லேடிஸ்' (Laapataa ladies) திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. லாபாடா லேடிஸ் திரைப்படம் ஆஸ்கர் விருது 2025 ஆண்டிற்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படம் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக ஒவ்வொரு திரைத்துறை சேர்த்து 29 சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில் தமிழ் மொழி சார்பில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', மாரி செல்வராஜ் இயக்கிய ‘வாழை’ விக்ரம் நடித்த 'தங்கலான்' மற்றும் ‘ஜமா’ ஆகிய படங்கள் பரிந்துரை செய்யப்பட்டன. அதேபோல் மலையாளத்தில் ஆட்டம், உல்லொழுக்கு, ஆடுஜீவிதம் ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: தஞ்சாவூர் மண் வாசனையில் ஒரு ஃபீல் குட் திரைப்படம்... 'மெய்யழகன்' டிரெய்லர் வெளியீடு! - Meiyazhagan trailer

இதனைத்தொடர்ந்து ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும் படங்கள் தேர்வு செய்ய அனைத்து மொழி திரைத்துறை சேர்த்து 13 நபர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவில் தமிழ் திரைத்துறையை சேர்ந்த எடிட்டர் பிரவீன் கே.எல். இடம் பெற்றுள்ளார். இதனைதொடர்ந்து அமீர்கான் தயாரிப்பில் கிரண் ராவ் இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற ’Laapataa ladies’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருதிற்கு தேர்வாகியுள்ள லாபாடா லேடிஸ் (Credits - ETV Bharat Tamil Nadu)

ABOUT THE AUTHOR

...view details