சென்னை: கங்குவா படத்தில் கார்த்தி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. பீரியட் டிராமாவாக உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். சூர்யா திரை வாழ்வில் அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படமாக கங்குவா உருவாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகளில் படம் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் காலை முதலே திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சூர்யா கங்குவா, ஃபிரான்சிஸ் என இரட்டை வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளார். கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
பலநூறு ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதையில் வரும் சூர்யா மற்றும் சம காலத்தில் வரும் சூர்யா ஆகிய இரண்டு கதாபாத்திரத்திற்கும் கனெக்ஷன் உள்ளது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் கார்த்தி இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸில் கார்த்தி தோன்றுவதாக கூறப்படும் நிலையில், ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.