சென்னை:பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பிய இந்தியன் 2 திரைப்படம் நேற்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் இன்றளவும் பேசப்பட்டு வரும் நிலையில், இந்தியன் 2 திரைப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் விண்ணைத் தொட்டது. இந்நிலையில், நேற்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் இந்தியன் 2 திரைப்படம் வெளியானது.
படம் வெளியாகி முதல் நாள் வசூல் ரூ.26 கோடி தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் மதயாரித்துள்ளது. இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்க, ஏ.ஆர் ரஹ்மானின் பழைய பிண்ணனி இசையும் படத்தில் இடம்பெறும் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருந்தார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிய நிலையில், படம் வெளியான நேற்று தமிழக ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். படம் வெளியாவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல, கடந்த 2020ஆம் ஆண்டு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து ஓடிடி தளத்தில் வெளியான சூரரைப்போற்று திடைப்படம் தேசிய விருதினை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இந்தி ரீமேக்கான சர்ஃபிரா திரைப்படம் இந்தியன் 2 படத்துடன் மோதியது.
நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள இப்படத்தில் சூர்யா கேமியோ ரோல் செய்துள்ளார். இந்தியன் 2 திரைப்படத்துடன் மோதிய சர்ஃபிராவுக்கு எதிர்ப்பார்ப்புகள் குவிந்தன. ஆனால், படம் வெளியான முதல் நாள் ரூ.2.40 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் அக்ஷய் குமாரின் 150வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ட்ரீட் மேல ட்ரீட் கொடுக்கும் கமல்ஹாசன்.. 'இந்தியன் 2' குறித்து ரோபோ சங்கர் புகழாரம்! - Robo Shankar About Indian 2