சென்னை: நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் சிவகார்த்திகேயன், சிம்பு நடிக்கும் படங்களை தயாரித்து வருகிறார். மேலும் தற்போது இந்தியன் 2, பிரபாஸ் நடிக்கும் கல்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இது மட்டுமில்லாமல் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் (thug life) படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தக் லைஃப் கமலின் 234வது படமாக உருவாகி வருகிறது. இதற்கு முன்னதாக எச்.வினோத் இயக்கத்தில் கமல் தனது 233வது படத்தில் நடிக்க உள்ளாக அறிவிப்பு வெளியானது. இதற்காக பல மாதங்களாக எச்.வினோத் திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படங்களின் பட்டியலை வெளியிட்டது, அதில் எச்.வினோத் இயக்கும் திரைப்படம் இடம் பெறவில்லை.
இதனால் படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. இப்படத்தின் திரைக்கதை கமலுக்கு பிடிக்காததால் பல்வேறு மாற்றங்களை அவர் செய்ய சொன்னதாக கூறப்படுகிறது. இதன் பின்னர், திரைக்கதையில் மாற்றம் செய்து வந்தார் எச்.வினோத். ஆனால், அதுவும் கமலுக்கு திருப்தியாக இல்லாததால் இப்படத்தை கைவிடும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.