சென்னை:அறிமுக இயக்குநர் பாலசுப்ரமணியின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பிளாக்’( BLACK). இந்த பாடத்தில் நடிகர் ஜீவா மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ளனர். முன்னதாக இந்த பாடத்தின் டிரைலர் வெளியிடப்பட்ட நிலையில் பார்வையாளர் மத்தியில் எதிப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தை ‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ‘இறுகப்பற்று’ போன்ற படங்களை தயாரித்த பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ரசிகளை ஈர்க்குமா ஹாரர் த்ரில்லர் படம்:இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக கோகுல் பினாயின், படத்தொகுப்பாளராக பிலோமின் ராஜின் மற்றும் பின்னணி இசை அமைப்பாளராக சாம் சி.எஸ்ஸின் பணியாற்றியுள்ளனர்.
இதையும் படிங்க:அமரன் படத்தின் முதல் பாடல் "ஹே மின்னலே" ரிலீஸ்!
இந்த படம் வரும் அக்.11ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இந்த படத்தை சுப்பையா சண்முகத்தின் SSI புரொடக்சன் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. ஏற்கனவே அக்.10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் பட ரிலீஸாக உள்ள நிலையில் அடுத்த நாளே இந்த படமும் வெளியாக உள்ளதால் இந்த படம் வேட்டையனுடன் நேருக்கு நேரு மோதி வசூல் போட்டியில் இறங்க உள்ளது.
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து ஒரு ஆக்ஸன் த்ரிலாராக உருவாகி உள்ள நிலையில் பிளாக் ரசிகர்கள் ஈர்க்கும் ஹாரர் த்ரில்லர் படமாக உள்ளது. இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாள் திரைக்கு வர உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்