தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தீபாவளி ரேஸில் எஸ்கே உடன் போட்டியிடும் ஜெயம் ரவி.. பிரதர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Brother movie release date - BROTHER MOVIE RELEASE DATE

Brother movie release date: ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் திரைப்படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பிரதர் திரைப்பட போஸ்டர்
பிரதர் திரைப்பட போஸ்டர் (CREDITS - screen scene X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 5:07 PM IST

சென்னை:தமிழ் சினிமாவில் நகைச்சுவை படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இயக்குநர் எம்.ராஜேஷ். இவர் ஏற்கனவே சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதன்பிறகு இவரது படங்கள் போதிய வரவேற்பு பெறவில்லை.

இந்நிலையில், தற்போது ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் (Brother) படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக ப்ரியா மோகன் நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத் குமார், ராவ் ரமேஷ், எம் எஸ் பாஸ்கர், சதீஷ் கிருஷ்ணன், சுரேஷ் சக்கரவர்த்தி, விருத்தி விஷால் மற்றும் மாஸ்டர் அஷ்வின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திலிருந்து ஃப்ர்ஸ்ட் சிங்கிளான மக்காமிஷி பாடல் கடந்த 20ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும், யூடியூப்பில் 2 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இப்பாடல் வரிகளை பால் டப்பா எழுதி பாடி உள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

இப்படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 ஒடிடி தளம் பெற்றுள்ளது. ஒரு இளைஞன் மற்றும் அவரது சகோதரிக்கு இடையேயான பாசப்பிணைப்பை கலகலப்பாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் சொல்லும் குடும்ப திரைப்படமாக பிரதர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரதர் படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி பிரதர் வெளியாக உள்ளது. மேலும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்துடன் பிரதர் திரைப்படம் வெளியாகவுள்ளது. இது இருவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:"எனக்கே தெரியாமல் ஒரு நிமிட காட்சிகள் சேர்ப்பு" - 'மழை பிடிக்காத மனிதன்' பட இயக்குநர் விஜய் மில்டன் வேதனை! - Mazhai pidikkadha manithan

ABOUT THE AUTHOR

...view details