சென்னை:லைகா புரொடக்சன்ஸ் - சுபாஸ்கரன் தயாரித்து சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் 'இந்தியன் 2' ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனிருத் இசையில் பா.விஜய் வரிகளில் உருவான இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நேற்று (ஜூன் 1) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன், பாபி சிம்ஹா, நாசர், ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா, பிரம்மானந்தம், மிர்ச்சி சிவா, ரோபோ சங்கர், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், ஷங்கர், நடிகைகள் அதிதி ஷங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீதி சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக நடிகர் ரோபோ ஷங்கர், பாடலாசிரியர் பா.விஜய் மற்றும் நடிகை அதிதி ஷங்கர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
நடிகர் ரோபோ சங்கர்:"எங்களுக்கு இன்று ரொம்ப சந்தோசமாக நாள். இதற்காக தான் காத்திருந்தோம். இந்தியன் படம் அப்போதே நல்ல ஹிட். இப்போது 25 வருடங்கள் கழித்து இந்தியன் 2 வருகிறது. இப்போதே தேசிய விருதுக்காக இந்த படம் தயாராக உள்ளது.
எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் கமல் ரசிகர்கள். ஒரு நடிகனுக்காகக் கோயம்புத்தூரில் மாநாடு நடந்தது கமல்ஹாசனுக்கு மட்டும்தான். இந்தியன் 1 ரீரிலீஸை நான் ஒரு தியேட்டரில் கொண்டாடப் போகிறேன். மேலும் இந்தியன் 2 ரிலீஸுக்கும் காத்திருக்கிறன்" என்று கூறினார்.