சென்னை:இஸ்ரேல் மற்றும் காசா இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் காரணமாக கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட நிலையில், ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் முயன்றும் இஸ்ரேல் தனது போரை நிறுத்தவில்லை. இந்நிலையில், இஸ்ரேல்-காசா போரால் அதிருப்தியில் இருந்த அமெரிக்க வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ராணுவ வீரரான ஆரோன் புஷ்னெல், விமானப் படையில் உயர் பதவியில் இருந்து வந்துள்ளார். இவர் காசா போர் தொடர்பாக நீண்ட நாட்களாக அதிருப்தியில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு ராணுவ உடையில் வந்த அவர், இனிமேலும் இனப் படுகொலைக்கு உடந்தையாக இருக்க மாட்டேன் என்று கூறி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். உடனடியாக, பாதுகாப்பு படையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க:ஜோஷ்வா படத்தில் வருணின் நடிப்பு எப்படி? - மனம் திறந்த கௌதம் வாசுதேவ் மேனன்!