தமிழ்நாடு

tamil nadu

விக்ரம் இந்த படத்துல நடிக்கல, வாழ்ந்துருக்காரு... தங்கலான் படம் பார்த்த ரசிகர்கள் கருத்து! - thangalaan review

By ETV Bharat Entertainment Team

Published : Aug 15, 2024, 5:41 PM IST

Thangalaan Movie Review by fans: பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் கூறும் கருத்துக்களைக் காணலாம்.

தங்கலான் படம் பார்த்த ரசிகர்கள் கருத்து
தங்கலான் படம் பார்த்த ரசிகர்கள் கருத்து (Credits - @StudioGreen2 X page, ETV Bharat Tamil Nadu)

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள தங்கலான் படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று சுதந்திர தினமான 15ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தங்கலான் படம் பார்த்த ரசிகர்கள் கருத்து வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

அந்த வகையில், இன்று காலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் காலை 9 மணி அளவில் தங்கலான் படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. தங்கலான் திரைப்படம் வெளியானதையொட்டி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, தங்கலான் திரைப்படம் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

ரசிகர் ஒருவர் பேசுகையில், "தங்கலான் படத்தில் விக்ரம் நடிப்பு அற்புதமாக உள்ளது. கடைசியில் தங்கலானே பாடல் வேற லெவலில் உள்ளது" என்றார். மற்றொரு ரசிகர் பேசுகையில், "விக்ரம் இப்படத்தில் நடிக்கவில்லை, வாழ்ந்துள்ளார். இப்படத்தில் பா.ரஞ்சித்தின் அரசியலும் உள்ளது" என்றார். மேலும் ரசிகர்கள் பலர் இது விக்ரம் படமாக இருப்பதாகவும், அதேநேரம், பா.ரஞ்சித்தின் இயக்கமும் சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, தங்கலான் படத்தில் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் பின்னணி இசையில் முக்கிய பங்காற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, படத்தில் விக்ரமின் நடிப்பு பிரமிக்க வைப்பதாக உள்ளது என பலர் தெரிவித்தனர். படத்தில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருப்பதாகவும், ஒளிப்பதிவு எந்தவித தேக்கமும் இன்றி இருப்பதாகவும் ரசிகர்கள் கூறினர். தங்கலான் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், வரும் நாட்களில் விடுமுறை தினம் அதிகமாக உள்ளதால் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் தங்கலான்.. ரசிகர்களுடன் படம் பார்த்த விக்ரம், பா.ரஞ்சித்! - vikram watched thangalaan movie

ABOUT THE AUTHOR

...view details