தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"ஆப்ரேஷன் சக்ஸஸ் ஆகவில்லை என்றால் பெட்டில்தான் இருந்திருப்பார்" - அஜித் குறித்து சுந்தர்.சி பகிர்ந்த சுவாரஸ்யம்! - Sundar C About Ajith

Sundar C About Ajith: நடிகர் அஜித் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் இயக்குநர் சுந்தர் சி பேசியுள்ளது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சுந்தர் சி மற்றும் அஜித் குமாரின் புகைப்படம்
சுந்தர் சி மற்றும் அஜித் குமாரின் புகைப்படம் (Credit: ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 10:31 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முறை மாமன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுந்தர் சி. அதனைத்தொடர்ந்து அருணாச்சலம், உன்னைத் தேடி போன்ற படங்களை இயக்கினாலும், 2003ஆம் ஆண்டு கமல்ஹாசனை வைத்து இயக்கிய 'அன்பே சிவம்' திரைப்படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

இதையடுத்து சரியான கதை அமையாததால், சில ஆண்டுகள் ஃபீல்ட் அவுட் ஆகி இருந்தார். பின்னர், தனது பாணியை மாற்றிக்கொண்டு காமெடி கலந்த கமர்சியலான படங்கள் மூலம் மீண்டும் இயக்குநராக வலம் வருகிறார். தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள அரண்மனை 4 திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் புரொமோஷன் ஒன்றிற்காக யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த இயக்குநர் சுந்தர் சி, நடிகர் அஜித் பற்றி பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அஜித்தை வைத்து உன்னைத் தேடி என்ற படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார். அப்படத்தின் படப்பிடிப்பு நேரத்தில் நடந்த சம்பவம் ஒன்று குறித்து அவர்‌ பேசியுள்ளார்.

அதில், "உன்னைத் தேடி படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடந்தது. அப்போது விமானத்தில் செல்லும் போது அஜித் என்னிடம் எனக்கு முதுகில் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கான மருத்துவர் ஓய்வு பெற உள்ளார். அதற்குள் நான் அந்த அறுவை சிகிச்சை செய்து முடிக்க வேண்டும்.

அதனால், 15 நாட்கள் படப்பிடிப்பை ஒரு வாரத்திற்குள் நீங்கள் எடுத்து முடித்தால் நான் இந்தியா திரும்பி அதனை முடித்து விடுவேன் என்றார். ஆப்ரேஷன் சக்ஸஸ் ஆகுமா? என்று தெரியவில்லை. ஒருவேளை சக்ஸஸ் ஆகவில்லை என்றால், எனது வாழ்நாள் முழுவதும் நான் பெட்டில்தான் காலத்தைக் கழிக்க வேண்டும். எனவே படப்பிடிப்பை சீக்கிரம் முடியுங்கள் என்றார்.

அந்த வலியையும் தாங்கிக் கொண்டு பாடல் காட்சியில் நடித்தார். முதுகில் உள்ள பிரச்சனை காரணமாக அவருக்கு உணரும் திறன் இல்லாமல் இருந்தது. ஒருமுறை சாலக்குடியில் படப்பிடிப்பு நடக்கும் போது அங்கு பயங்கர குளிர். தண்ணீர் ஜில்லென்று இருக்கும் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டு நடந்தோம்.

ஆனால், அஜித் சாதாரணமாக அதில் நடந்தார். நான் கேட்டபோது எனக்கு எந்த உணர்வும் தெரியவில்லை என்றார். அப்படி கஷ்டப்பட்டு நடித்தார். அதனால் தான், வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:நீட் தேர்வு 2024; “இயற்பியல் சற்று கடினம்.. உயிரியல் ஈசி” - மாணவர்களின் கருத்து என்ன? - NEET Exam Student Review

ABOUT THE AUTHOR

...view details