சென்னை: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள 'இந்தியன் 2' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை 6 மணியளவில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.
இப்படத்தில் கமலுடன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜூலை மாதம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீடு நேற்று நடைபெற்றது. இதில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இயக்குனர் சங்கர் பேசியாதவது, “தமிழன் இந்தியாவை ஆளும் நாள் ஏன் வரக்கூடாது? ஆசிய கண்டத்தில் ஒரு பெண்மணியை பிரதமராக்கி பார்த்தவர்கள் நாம். இதையும் செய்து காட்டுவோம். இது என் நாடு. இந்த நாட்டின் ஒற்றுமையை காக்க வேண்டியது நம் கடமை. இந்தியன் தாத்தா நல்லவர்களுக்கு ஹீரோ. கெட்டவங்களுக்கு கொடூரமான வில்லன்” எனக் கூறினார்.
இந்தியனுக்கு மேல படமில்லை!பின்னர் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சங்கர், “கமல் சார் 360 டிகிரி நடிகர் என நான் ஒரு விழாவில் கூறியுள்ளேன். ஆனால், இந்தியன் 2வில் கமல் சார் 361 டிகிரி நடிகராக அப்டேட் ஆகியுள்ளார். இந்தப் படத்தில் 4 நாள்கள் கயிற்றில் தொங்கியபடி அவர் நடித்துள்ளார்.