சென்னை: திரையுலகின் தந்தை டி.இராமானுஜம் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி, சென்னை மயிலாப்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
மேலும், இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், கே.ஆர் மற்றும் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, கே.ராஜன், சத்யஜோதி தியாகராஜன், தேனாண்டாள் முரளி, நடிகர் நாசர், திருப்பூர் சுப்பிரமணியன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், "டி.இராமானுஜம் முடிந்தவரை கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பார். படத்துக்கான பூஜை போடும் போது, இடையில் வேறொரு தயாரிப்பாளர் தங்களுக்கு படம் பண்ண வேண்டும் என்று பெரிய தொகையை ஒரே தடவையில் கொடுத்ததாகவும், ஆனால் டி.இராமானுஜத்துக்கு படம் பண்ணுவதாக வாக்கு கொடுத்து விட்டேன் என்று சொன்னேன்.
இதைக் கேட்டு டி.இராமானுஜம், உடனே நீங்கள் அந்தப் படத்தை முடித்து விட்டு எங்கள் படத்தை பண்ணுங்க என்று சொன்னார். வார்த்தை கொடுப்பது பெரிதல்ல. அதைக் காப்பாற்ற நினைக்கும் போது எனக்கு வேறு சில சூழ்நிலை வந்து விடுகிறது.