தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"ஃபிலிம் மேக்கிங் யாராலும் தவிர்க்க முடியாத மொழியாகிவிட்டது" - நாசர் பெருமிதம்! - Diploma in Film making AI France

Diploma in Film making AI France : சென்னை லயோலா கல்லூரியில் உள்ள விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் பி.எம்.எம். துறைகள் இணைந்து டிப்ளமோ இன் ஃபிலிம் மேக்கிங் (AI) பிரான்ஸ் என்ற படிப்பை தொடங்கி உள்ளது.

நாசர்
நாசர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 9:47 PM IST

சென்னை: சென்னை லயோலா கல்லூரியில் உள்ள விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் பி.எம்.எம் துறைகள் இணைந்து இன்று விஸ்காம் பிரிவியூ தியேட்டரில் "டிப்ளமோ இன் ஃபிலிம் மேக்கிங் (AI) பிரான்ஸ்" என்ற படிப்பை தொடங்கி உள்ளது.

இந்த தனித்துவமான படிப்பை கலர் கார்பென்டர் என்னும் நிறுவனத்தின் இயக்குனர்கள், லயோலா விஸ்காம் முன்னாள் மாணவர்களான மாதவி இளங்கோவன் மற்றும் ஜான் விஜய் ஜெபராஜ் ஆகிய இருவரால் வழி நடத்தப்பட இருக்கிறது.

நாசர் மற்றும் ஜான் விஜய் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

லயோலா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில், பிரான்ஸ், பாரிஸில் உள்ள டான் பாஸ்கோ இன்டர்நேஷனல் மீடியா அகாடமியுடன் இணைந்து பாரம்பரியமிக்க விஸ்காம் துறைக்காக இந்த படிப்பை அவர்கள் வடிவமைத்துள்ளனர். இந்த படிப்பை சென்னையில் எட்டு மாத தீவிர பயிற்சித் திட்டமாக தொடங்கி, பாரிஸில் இறுதி திட்டப்பணியுடன் நிறைவு செய்ய முடிவு செய்துள்ளது.

படிப்பின் நோக்கம்: திரைப்பட ஆக்கத்தின் மூன்று கட்டமான முன் தயாரிப்பு, ஸ்கிரிப்டிங் மற்றும் பிந்தைய தயாரிப்பிலும் Al பயன்பாடுகளைப் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்வார்கள். பல்வேறு திரைப்படத் தயாரிப்பு செயல்முறைகளில் மாணவர்கள் சிறந்த அனுபவத்தைப் பெறுவதையும், AI தொழில்நுட்பங்களை தடையின்றி ஒருங்கிணைப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

இது இந்திய மற்றும் சர்வதேச திரைப்படத் தயாரிப்பைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிப்பதுடன், கேன்ஸ் திரைப்பட விழா மற்றும் சர்வதேச நிதி மேலாண்மை பற்றிய புரிதல்களை மாணவர்களுக்கு வழங்கும். இந்த படிப்பை தேர்ந்தெடுத்தவர்களுக்கு பிரான்சில் உள்ள டான் பாஸ்கோ சர்வதேச ஊடக அகாடமியில் மேற்படிப்பைத் தொடர எராளமான வாய்ப்புகள் உள்ளன.

இதில், சிறப்பு விருந்தினர்களாக லயோலா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் அருள்முனைவர் ஜெ.அந்தோணி ராபின்சன், நடிகரும், நடிகர் சங்க தலைவருமான நாசர் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், பிரான்சின் டான் பாஸ்கோ சர்வதேச ஊடக அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி அருட்தந்தை ஜான் பால் சுவாமிநாதன் கலந்து கொண்டார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், எடிட்டர் லெனின், சமகால ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாசர்,"லயோலா கல்லூரியின் 100 ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, புது படிப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து டிப்ளமோ இன் ஃபிலிம் மேக்கிங் (AI) பிரான்ஸ் என்ற படிப்பை ஆரம்பித்துள்ளார்கள்.

ஃபிலிம் மேக்கிங் யாராலும் தவிர்க்க முடியாத மொழியாகி விட்டது. முன்னர் ஃபிலிம் எடுக்கனும் என்றால் ரொம்ப கஷ்டப்படனும். இப்போ டிஜிட்டல் வந்ததிலிருந்து ரொம்ப இஸியாக இருக்கிறது. இதை வடிவமைத்த ஜான் விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.

பின்னர் பேசிய நடிகர் ஜான்விஜய், "இந்த கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள இந்த படிப்பானது இந்தியாவில் வேறு எங்கேயும் கிடையாது. AI மூலமாக எப்படி ஃபிலிம் மேக்கிங் எப்படி பன்றது என்பதை நாங்கள் கற்றுக் கொடுப்போம். அது மட்டுமல்லாமல் funding and distribution எப்படி கிடைக்கும் என்பதையும் கற்றுக் கொடுப்போம்.

மாணவர்கள் இந்த படிப்பை சென்னையில் எட்டு மாதமும், ஒரு மாதம் செய்முறை விதமாக பாரீஸில் படிப்பார்கள். மேலும், மாணவர்கள் இங்கு ஸ்கிரீப்ட் எழுதி பாரீஸில் ஷுட்டிங் செய்வார்கள். மாணவர்கள் இந்த படிப்பை முடித்து விட்டு வரும் அவர்களுக்கு லயோலா கல்லூரி மற்றும் டான் பாஸ்கோ அகாடமி சான்றிதழ்களும் கிடைக்கும். இந்த படிப்பிற்கு 20 மாணவர்களை தேர்ந்தெடுக்க உள்ளோம். அவர்களுக்கு நேர்காணல் மற்றும் aptitude test இருக்கும்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா 'தங்கலான்'? பயமுறுத்துமா 'டிமாண்டி காலனி 2'?... சுதந்திர தினத்தன்று வெளியாகும் படங்கள் ஒரு பார்வை! - Independence day movie releases

ABOUT THE AUTHOR

...view details