தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஆர்னவ் மோடில் பெண்கள் மீது வன்மத்தை கக்கிய தர்ஷா; அட்வைஸ் செய்த விஜய் சேதுபதி! - BIGG BOSS 8 TAMIL

Bigg Boss 8 Tamil: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தர்ஷா பெண்கள் அணியை கடுமையாக பேசிய விதம் ஏற்ற்க் கொள்ளும்படியாக இல்லை என விஜய் சேதுபதி அறிவுரை கூறினார்.

விஜய் சேதுபதி, தர்ஷா குப்தா
விஜய் சேதுபதி, தர்ஷா குப்தா (Credits - ETV Bharat Tamil Nadu, Dharsha Gupta Instagram Account)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 28, 2024, 12:19 PM IST

Updated : Oct 28, 2024, 1:03 PM IST

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்புடன் நேற்றைய எபிசோடு துவங்கியது. வார இறுதியில் தொடங்கிய பிக்பாஸ் எபிசோடில் விஜய் சேதுபதி ஆண்கள் அணி காயின் டாஸ்கை விளையாடிய விதம் குறித்து கேள்வி எழுப்பினார். ஆண்கள் அணியில் வெல்ல வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்தது. பெண்கள் அணியை எப்படி கையாள வேண்டும் என்ற யோசனை துளி கூட இல்லை.

இதுகுறித்து விஜய் சேதுபதி கேட்டபோது ஆண்கள் அணியில் மாற்றி மாற்றி கை காமித்து கொண்டனர். ஆண்கள் அணியில் தெளிவு இல்லாததை விஜய் சேதுபதி கண்டித்தார். மேலும் ”எதற்கு எடுத்தாலும் முத்துக்குமரன் தான் பதில் செல்வாரா, வேறு யாரும் ஆண்கள் அணியில் பேச மாட்டார்களா” என விளாசினார். இதனைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற எலிமினேஷன் எபிசோடில் முதலில் ஒரு விவகாரமான டாஸ்க் வைக்கப்பட்டது.

இது சுவாரஸ்யத்தை கூட்டவும், போட்டியாளர்கள் மத்தியில் புதிய சண்டையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. மற்றவர்களை வேலை வாங்குபவர்கள் மேனேஜர் என்றும், ஜாலியாக பொழுதை கழிப்பவர்கள் கஸ்டமர் என்றும், சுயமாக சிந்திக்காதவரை ஹெல்பர் என்றும் வகைப்படுத்தி அந்தந்த அணியில் உள்ளவர்களை கூற வேண்டும். அப்போது பெண்கள் அணியில் சுனிதா தங்களது குரூப் என கூறப்படும் 6 பேருக்கு ஹெல்பர் பட்டம் வழங்காமல் தர்ஷாவுக்கு பெயருக்கு வழங்கிய போது குரூப்பிஸம் என்பது அப்பட்டமாக தெரிந்தது.

ஆனால் பெண்கள் அணியில் இரண்டு குரூப் இருந்தது இந்த டாஸ்கில் தெரிந்தது. ஒன்று 6 பேர் கொண்ட அணி, மற்றொன்று தர்ஷா, சவுந்தர்யா, சாச்சனா கொண்ட புதிய அணி. ஆண்கள் அணியில் எந்த வேலையும் செய்யாமல் ஜாலியாக சுற்றும் கஸ்டமர் பட்டத்தை அதிகம் பேர் ஜெஃப்ரிக்கு கொடுத்தனர். பெண்கள் அணியில் ஹெல்பர் பட்டத்தை அதிகமாக சவுந்தர்யா பெற்றார். இதனைத்தொடர்ந்து இந்த வார எலிமினேஷனில் தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டார்.

அப்போது சாச்சனா, நான் நாமினேஷன் ஃப்ரி பாஸை உங்களுக்கு கொடுக்க சொன்னோன் அக்கா என அழுத விதம் ஓவராக முதிர்ச்சி இல்லாத தன்மையை காட்டியது. வெளியில் வந்த தர்ஷா, பெண்கள் அணியை திட்டாத குறையாக வன்மத்துடன் பேசினார். சுனிதாவை ஏளனமாக பேசிய தர்ஷா, ஆனந்தி, பவித்ராவிடம் பேசாமல் வேண்டுமென்றே கடந்து சென்றது ஒரு தவறான அணுகுமுறையாக பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: "உன் கூடவுமா அரசியல் பன்னனும்".. விஜய்க்கு எதிர்ப்பு, சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த போஸ் வெங்கட்!

தர்ஷா நான் வெளியேறியதற்கு காரணம், அந்த 6 பேர் அணி செய்த சதி என கூறினார். இது பெண்கள் அணியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த பின்னரும், இவ்வாறு வன்மத்தை கக்குவது ஏன் என விஜய் சேதுபதி கேட்டார். நீங்கள் போட்டியை விட்டு வெளியேறினால் மற்றவர்களாவது ஜெயிக்க வேண்டும் என நினைக்க வேண்டும் என விஜய் சேதுபதி அட்வைஸ் செய்தார். ஆண்கள் அணியினர் இனியாவது முத்துக்குமரன் பின் நிற்காமல் தனித்து விளையாடுவார்களா, பெண்கள் அணியினர் பெரிய சண்டை ஏற்படுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Oct 28, 2024, 1:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details