கோவை: டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ள ’வேட்டையன்’ திரைப்படம் இன்று (அக்.10) வெளியானது. கோவையில் இந்த திரைப்படத்தை காண காலை முதலே ரசிகர்கள் திரையரங்கம் முன்பு குவிந்தனர். கோவை ரயில் நிலையம் அருகே உள்ள திரையரங்கம் முன்பு குவிந்த ரசிகர்கள் மேள தாளம் முழங்க நடனமாடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
மேலும் திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டு இருந்த ரஜினியின் பிளக்ஸ் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தும், சூடம் காட்டி தேங்காய் உடைத்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் 60 கிலோ எடையில் ரஜினியின் படம் பொறித்த பிரமாண்ட கேக்கினை வெட்டி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.