கோவா: தமிழில் நடிகர் கார்த்தியின் தீரன் அதிகாரம், நடிகர் சூர்யாவின் என்.ஜி.கே, தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் ஸ்பைடர், அண்மையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் உள்ளிட்ட படங்களின் மூலம் பரீட்சயமானவர் ரகுல் பிரீத் சிங். இவர் தனது நீண்ட நாள் காதலர் ஜேக்கி பக்கானியை இன்று (பிப்.21) கரம் பிடித்தார்.
கோவாவில் உள்ள நட்சத்திர விடுதியில் மிகப் பிரம்மாண்டமாக நடந்த நிகழ்வில் சீக்கிய முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமண விழாவில் இருவரது குடும்பத்தினர், சினிமா துறையில் மிக நெருக்கமானவர்கள் உள்ளிட்டோர் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகரும், தயாரிப்பாளருமான ஜேக்கி பக்கானி - ரகுல் பிரீத் சிங் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்த நிலையில் இன்று திருமணம் செய்து கொண்டனர்.