ஐதராபாத்:பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிகை தீபிகா படுகோனுக்கு பெண் குழந்தை பிறந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக நேற்று நடிகை தீபிகா படுகோன், மும்பை கிரிகோன் பகுதியில் உள்ள எச்.என் ரிலையன்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தாய் தீபிகா படுகோனும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசவத்திற்கு முன்பாக ரன்வீர் சிங், தீபிகா படுகோ உள்ளிட்ட குடும்பத்தினர் மும்பையில் உள்ள பிரபல சித்தி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட நிலையில், கூட்டத்தினருடன் ரன்வீர் மற்றும் தீபிகா பிரசவம் நல்ல முறையில் நடைபெற வேண்டி சித்தி விநாயகர் கோயிலில் வேண்டிக் கொண்டனர்.