தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"2025இல் கடைசி திரைப்படம்".... சினிமாவில் இருந்து விடைபெறுவதாக பிரபல நடிகர் அறிவிப்பு!

Vikrant massey quits cinema: 12th Fail திரைப்படம் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி சினிமாவில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி
பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி (Credits - ANI)

By ETV Bharat Entertainment Team

Published : 6 hours ago

ஹைதராபாத்: பிரபல பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி சினிமாவில், இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி ரன்வீர் சிங், சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ‘lootera’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் சோயா அக்தர் இயக்கத்தில் Dil dhadakne Do, கொன்கனா சென் இயக்கிய A death in the gunj, half girlfriend, Lipstick under my burkha ஆகிய படங்களில் நடித்தார்.

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான வெப் தொடர் ’மிர்சாபூர்’ தொடரில் விக்ராந்த் மாஸ்ஸி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து 2020இல் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான chhapaak திரைப்படத்தில் நடித்தார். கடந்த 2023ஆம் ஆண்டு விக்ராந்த் மாஸ்ஸி நடிப்பில் வெளியான ’12th fail’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

மேலும் அவரது திரைவாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய படமாக அமைந்தது. இப்படம் திரையரங்கில் மட்டுமல்லாமல் ஓடிடியிலும் வெளியாகி இந்தியா முழுவதும் பெரிய அளவில் பேசப்பட்டது. அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய வகையில் உள்ளதாக 12th fail திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. சமீபத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்த ’சபர்மதி ரிப்போர்ட்’(the sabarmati report) திரைப்படம் வெளியாபது.

இப்படத்திற்கு மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் விக்ராந்த் மாஸ்ஸி சினிமாவில் இருந்து விடைபெறுவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். அவரது பதிவில், “கடைசி சில ஆண்டுகள் எனது வாழ்வில் சிறப்பானதாக அமைந்தது. எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. ஒரு கணவர், தந்தை, மற்றும் மகனாக எனது வீட்டை கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இதையும் படிங்க: நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது வேல்ஸ் பல்கலைக்கழகம்!

வரும் 2025ஆம் ஆண்டு கடைசியாக ஒரு முறை நாம் திரைப்படங்களில் சந்திப்போம். கடைசி 2 படங்கள் மற்றும் பல வருடங்களின் நினைவுகளுடன்” என கூறியுள்ளார். விக்ராந்த் மாஸ்ஸி திடீரேன சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது விக்ராந்த் மாஸ்ஸி ’யார் ஜிக்ரி’ மற்றும் ’ஆன்கோன் கி குஸ்தாகியான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details