தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பெண்களுடன் நட்பு பாராட்டும் ஆர்னவ்... கேலி செய்த போட்டியாளர்களிடம் நறுக்கென கேள்வி கேட்ட ஜெஃப்ரி!

Bigg Boss season 8 Tamil: பிக்பாஸ் வீட்டில் ஆர்னவ், ஆண்கள் அணியினர் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில், டிவி சேனல் டாஸ்க்கில் சுனிதா, ஜாக்குலின் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து செய்தியில் காணலாம்

பிக்பாஸ் 8 தமிழ்
பிக்பாஸ் 8 தமிழ் (Credits - @vijaytelevision X account)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 17, 2024, 10:56 AM IST

சென்னை: ஒரு பக்கம் முத்துக்குமரன், ஜாக்குலின் சண்டை, மறுபக்கம் பெண்கள் அணிக்காக கருப்பு ஆடாக செயல்படும் தர்ஷா குப்தா, இதற்கிடையில் ஆர்னவ் பெண்களிடம் மனிதநேய அடிப்படையில் வெந்நீர் கொடுத்தாராம். மேலும் ஆண்கள் அணியினர் ஆலோசனை செய்ய வேண்டும் என அழைத்த போது உடற்பயிற்சி தான் முக்கியம் என ஆர்னவ் நடையை கட்டினார்.

இதனைத்தொடர்ந்து தர்ஷா நானும் இந்த வீட்டிலிருப்பது தெரிய வேண்டும் என்பதற்காக ஆர்னவை பிரச்சனையில் சிக்க வைத்தார். ஆண்கள் அணியின் கேம் பிளான் குறித்து தன்னிடம் ஆர்னவ் தெரிவித்ததாக ஆண்கள் சபையில் போட்டுடைத்தார். இந்த விவகாரம் ஆண்கள் அணியில் பற்றி கொண்டு எரிய ஆர்னவிடம் டபுள் கேம் ஆட வேண்டாம் என அருண், விஷால் ஆகியோர் எச்சரித்தனர். எது எப்படியோ தர்ஷா நினைத்த படி ஆண்கள் அணியில் விரிசலை ஏற்படுத்தினார். மறுபக்கம் ஜாக்குலின், ஆர்னவ், தர்ஷா காதல் கதையை உருவாக்கி வருகிறார்.

இதனைத்தொடர்ந்து ஆண்கள், பெண்கள் அணிக்கு டிவி சேனல் டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித் ஆகியோரது பேச்சு ரசிக்குபடி இருந்தது. இதனைத்தொடர்ந்து அந்த டிவி டாஸ்க்கில் நடைபெற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் முத்து, விஷால், ஆனந்தி, ஜாக்குலின், தீபக் ஆகியோரது பங்களிப்பும் ரசிக்கும்படியாக அமைந்தது. அப்போது சுனிதா பின்னணியில் இருந்து பாடல் பாடியதை ஜாக்குலின் கிண்டல் செய்தததாக சுனிதா வருத்தமடைந்தார்.

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் ஜாக்குலின், சுனிதா ஆகியோர் எலியும் பூனையுமாக இருந்த நிலையில், சுனிதாவிற்கு ஜாக்குலினிடம் பிரச்சனை செய்ய இது ஒரு நல்ல காரணமாக அமைந்தது. இது பெண்கள் அணியில் ஒரு பெரும் பஞ்சாயத்தாக மாறியது. பின்னர் பிக்பாஸ், டிவி சேனல் டாஸ்க்கில் 1 முதல் 18 முதல் தங்களின் விளையாட்டு திறன்படி வரிசைபடுத்தி கொள்ளுமாறு தெரிவித்தார். இதில் முத்து, விஷால் ஆனந்தி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

13வது இடத்திற்கு வந்த சுனிதாவிற்கு யாரும் ஓட்டு போடாததால், தனது மொழி பிரச்சனை தான் காரணம் என அழத் தொடங்கினார். பின்னர் ஜெஃப்ரி ஓட்டு கேட்கும் போது, ஜாக்குலின் உள்ளிட்ட பெண்கள் அணியினர் நமட்டு சிரிப்பு சிரித்ததால் கோபமடைந்தார். இதற்கு ஜெஃப்ரி, "நான் ஒட்டு கேட்க தான் வந்திருக்கேன். இதில் சிரிக்க ஒன்னுமே இல்லை, உங்களுக்கு எல்லாம் ஒரு அடையாளம் இருக்கு, எனக்கு இல்லை அதற்காக தான் நான் இங்கு வந்தேன். பிடிச்சா ஓட்டு போடுங்க" என்றார்.

ஜெஃப்ரி கொடுத்த பதிலால் சிரித்தவர்கள் அனைவரும் மன்னிப்பு கேட்டு வாயை மூடிக் கொண்டனர். சுனிதா ஒரு பக்கம் அழுதபடி ஓரமாக உட்கார்ந்திருந்த நிலையில், ஜெஃப்ரியும் "என் ப்ரெண்ட்ஸ் மட்டும் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்க விடமாட்டானுங்க" என அழத் தொடங்கினார்.

இதையும் படிங்க: வந்தே பாரத் ரயில் உணவு குறித்து நடிகர் பார்த்திபன் புகார்... ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை!

ஜெஃப்ரி கேட்டது நியாயமானது தான் மக்களிடையே பிரபலம் அடைய வேண்டும் என்று தான் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். மேலும் அவர் நன்றாக விளையாடியும் வருகிறார். ஆனால் அவரை உதாசினப்படுத்தும் நடவடிக்கைகளில் மற்ற போட்டியாளர்கள் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். இந்த சீசன் பிக்பாஸ் வீட்டில் ஒரு நாள் கொஞ்சம் ஆட்டம் சூடு பிடித்தால், அடுத்த நாள் புஸ்சென்று பெரிய அளவில் சுவாரஸ்யம் இல்லாமல் நகர்கிறது. வரும் நாட்களில் சுவாரஸ்யம் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details