சென்னை: பிக்பாஸ் வீட்டில் 18ஆம் நாள் 'சொடக்கு மேல சொடக்கு போடுது' பாடலுடன் தொடங்கியது. அனைவரும் ஆலு பரோட்டா போட்டு சாப்பிட்டதால் பெண்கள் அணியில் உருளைகிழங்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அதற்கு சுனிதா 'யார் ஆலு பரோட்டா ஆர்டர் கொடுத்தது' என கேட்டுக் கொண்டு வீடு முழுவதும் சுற்றி வந்தார். காலையிலேயே ஜாக்குலின், சவுந்தர்யாவிடம் பாடி ஷேமிங் பஞ்சாயத்தை தொடங்கினார்.
அப்போது சவுந்தர்யா, 'மறுபடியும் முதல்ல இருந்தா' என்ற மோடில் மனசு புண்பட்டிருந்தால் சாரி என பேச்சை முடித்தார். இதனைத்தொடர்ந்து ஸ்டார் ஹோட்டல் டாஸ்கில் ஹோட்டல் ஊழியர்கள் எவ்வாறு விருந்தினர்களை கவனித்து கொண்டனர் என ரிவீயு செய்யும்படி பிக்பாஸ் தெரிவித்தார். இதில் முத்துக்குமரன் பெண்கள் அணியினரை பாராட்டுவது போல கலாய்த்த விதம் ரசிக்கும்படியாக இருந்தது. இதற்கு பிக்பாஸ் 'வஞ்சப்புகழ்ச்சி' நன்றாக இருந்ததாக தெரிவித்தார்.
பின்னர் இந்த ஹோட்டல் டாஸ்கில் நன்றாக விளையாடிய முத்துக்குமரன், ரஞ்சித், சுனிதா, தர்ஷா, பவித்ரா ஆகியோர் விருந்தினர் அணியாகவும், சரியாக விளையாடாதவர்கள் நிர்வாக அணியாகவும் பிரிக்கப்பட்டனர். இதில் நிர்வாக சேவையை பார்வையிட ஹோட்டல் முதலாளியின் மகனாக முத்துக்குமரன் நடித்திருந்தார். அந்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தினார். 'மூன்வாக் மூர்த்தி'யாக ரஞ்சித் கதாபாத்திரமும் ரசிக்கும்படியாக இருந்தது.
'ட்வீட்டி' என்ற குழந்தை கதாபாத்திரத்தில் தர்ஷிகா நடித்தார். 'லவ்' என பெயர் வைத்து கொண்ட தர்ஷா அந்தியன் திரைப்படம் போல மூன்று கதாபாத்திரத்தில் அவ்வப் போது மாறுவாராம். மறுபக்கம் நிர்வாக அணியில் மேனேஜர் பதவியை சவுந்தர்யா ஏற்றார். ஹோட்டல் ரிசப்ஷனிஸ்டாக தீபக் நிற்க, அவரிடம் பவித்ரா, கஜினி கெட்டப்பில் வந்து பேசிக் கொண்டிருந்தார். பின்னர் லவ் மோடில் வந்த தர்ஷா குப்தா, சாலட், சாண்ட்விச் என பல ஆர்டர்களை செய்தார்.
அப்போது ஜாக்குலின் அன்ஷிதாவிடம், ‘என்னடி இந்த லவ்வு வந்ததுல இருந்து தின்னுக்கிட்டே இருக்கு’ என கிண்டல் செய்தார். மறுபக்கம் முத்துக்குமரன், புகார் பலகையில் வரிசையாக நிர்வாகத்தின் மீது பல புகார்களை எழுதிக் கொண்டே இருந்தார். இதனைத்தொடர்ந்து தர்ஷாவுக்கு, சத்யா தலை அம்சாஜ் செய்து கொண்டிருந்தார். பின்னர் வாடிக்கையாளர் ஆர்டரக்ளை கவனித்து கொண்டிருந்த ஆனந்தி, கண்ணாடி கதவில் முட்டிக் கொண்டார்.