சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட ரியா தியாகராஜன் தான் வெளியேற்றப்பட்டது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8இல் தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆரம்பம் முதல் ரவீந்தர், அர்னவ், தர்ஷா, சுனிதா ஆகியோர் வெளியேறிய நிலையில் வைல்டு கார்ட் எண்ட்ரியாக 6 பேர் வந்தனர்.
அந்த 6 பேர்களில் நடிகையும், மாடலுமான ரியா தியாகராஜன் நுழைந்தார். அவர்கள் வந்த முதல் வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பித்த நிலையில், கடந்த வார எலிமினேஷனில் ரியா தியாகராஜன் வெளியேற்றப்பட்டார். எலிமினேட் செய்யப்பட்ட போது நான் எலிமினேட் செய்ய வேண்டிய நபர் கிடையாது என அழுது கொண்டே வெளியேறினார். மேலும் ரியா எலிமினேட் செய்யப்பட்டது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 8இல் வெளியேற்றப்பட்டது குறித்து ரியா அழுது கொண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியது, “இந்த பதிவு எடுக்கும் போதே நான் கொஞ்சம் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். ஏனென்றால் எனக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்கும் போதே என் நண்பர்கள் PR அணி வைத்துக் கொள் என்றெல்லாம் அட்வைஸ் செய்தனர். ஆனால் நான் அந்த விஷயங்கள் செய்யவில்லை, நான் பிக்பாஸ் வீட்டில் நன்றாக செயல்பட்டால் மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என நம்பி சென்றேன்.
பிக்பாஸ் வீட்டில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி அதற்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளேன். அனைத்து விஷயங்களும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நான் ஏதோ ஒன்று செய்கிறேன் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்படி இருந்தும் மக்கள் எனக்கு ஏன் ஆதரவு அளிக்கவில்லை என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. அதுமட்டுமின்றி நான் பிரபலம் இல்லை என்ற கேள்வியும் எனக்கு எழுகிறது.