சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் தனது திறமையால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக பத்து தல என்ற திரைப்படம் வெளியானது.
அதனைத்தொடர்ந்து ராஜ்கமல் ஃப்லிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார். வரலாற்றுப் படமாக உருவாக உள்ள இப்படத்தின் அடுத்த கட்ட அப்டேட் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள தக் லைஃப் படத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார். அதில், டேய் 2k kids, 90’s mood-ல நாளைக்கு சார்ப்பா 6.06 pm வரேன் என்று பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க :நாளை வெளியாகிறது சிம்புவின் அடுத்த பட அப்டேட்!
அதன்படி, சிம்புவின் அடுத்த படத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது என போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. அந்த போஸ்டரில், சிம்பு நடித்த தம் படத்தில், வரும் பாடலான ’கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டி கலக்குவேன்’ என்ற பாடலில், சிம்பு கையில் கைக்குட்டை கட்டி ஒரு Symbol வைப்பார். அதேபோல தற்போது இந்த போஸ்டரும் வெளியாகி உள்ளது.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து 'ஓ மை கடவுளே' என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து 'டிராகன்' படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்