தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ராமாயணம் படத்திற்காக ஹான்ஸ் ஸிம்மருடன் இணைந்து பணிபுரியும் ஏ.ஆர்.ரஹ்மான்? - arrahman hans zimmer - ARRAHMAN HANS ZIMMER

AR Rahman planning to collaborate with Hans Zimmer: ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி நடிக்கவுள்ள ராமாயணம் கதைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஸிம்மர் இணைந்து இசையமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராமாயணம் படத்திற்காக ஹான்ஸ் ஸிம்மருடன் இணைந்து பணிபுரியும் ஏ.ஆர்.ரஹ்மான்
ராமாயணம் படத்திற்காக ஹான்ஸ் ஸிம்மருடன் இணைந்து பணிபுரியும் ஏ.ஆர்.ரஹ்மான்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 8:36 PM IST

சென்னை: நிதேஷ் திவாரி இயக்கவுள்ள ராமாயணம் கதையில் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இதில் ராமராக ரன்பீர் கபூரும், ராவணனாக யாஷூம், சீதையாகச் சாய் பல்லவி நடிக்கவுள்ளனர். ராமாயணம் கதை மூன்றூ பாகங்களாக உருவாகவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த படத்தை அல்லு அரவிந்த் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஏப்ரல் 8ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான், பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மர் இணைந்து இசையமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று முறை கோல்டன் குளோப் விருது பெற்றுள்ள ஹான்ஸ் ஸிம்மர், இன்சப்ஷன், இன்டர்ஸ்டெல்லர், லையன் கிங், ட்யூன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சமீபத்தில் வெளியான ஆடுஜீவிதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதையும் படிங்க: 'டியர்' திரைப்பட இசை, டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜி.வி.பிரகாஷ் கூறியது என்ன? - Dear Movie Trailer Launch Event

ABOUT THE AUTHOR

...view details