பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்காக சிறந்த பின்னணி இசைக்காக தனது 7வது தேசிய விருதை பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்!
70வது தேசிய விருதுகள் வழங்கும் விழா: 7வது தேசிய விருது பெற்றார் ஏ.ஆர் ரஹ்மான்!
By ETV Bharat Entertainment Team
Published : Oct 8, 2024, 3:58 PM IST
|Updated : Oct 8, 2024, 6:02 PM IST
புது டெல்லி: 70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய விருது வென்ற திரைப்பட கலைஞர்களுக்கு தேசிய விருது வழங்குகிறார். தமிழில் இந்த பல கலைஞர்கள் தேசிய விருது வென்றுள்ளனர். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் முதல் பாகம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு ஆகிய பிரிகளில் தேசிய விருது வென்றுள்ளது. அதேபோல் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகைக்கான விருதை நித்யா மேனன், சிறந்த நடன இயக்குநருக்கான விருதை தாய்க் கிழவி பாடலுக்காக சதீஷ் ஆகியோர் வென்றுள்ளனர். இவர்கள் இன்று ஜனாதிபதியிடம் தேசிய விருது பெறுகின்றனர்.
LIVE FEED
70வது தேசிய விருதுகள் வழங்கும் விழா: தேசிய விருது பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்!
70வது தேசிய விருதுகள் வழங்கும் விழா: திருச்சிற்றம்பலம் படத்திற்காக தேசிய விருது பெற்ற நித்யா மேனன்!
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்திற்காக ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் தேசிய விருது பெற்றார் நடிகை நித்யா மேனன்!
70வது தேசிய விருதுகள் வழங்கும் விழா: தேசிய விருது பெற்றார் மணிரத்னம்!
பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்காக ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் தேசிய விருது பெற்றார் இயக்குநர் மணிரத்னம்!
70வது தேசிய விருதுகள் வழங்கும் விழா: பொன்னியின் செல்வன் படக்குழு பங்கேற்பு!
பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்காக தேசிய விருதுகள் பெறவுள்ள நிலையில், நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
70வது தேசிய விருதுகள் வழங்கும் விழா: ஹிந்தி இசையமைப்பாளர் விஷால் பரத்வாஜுக்கு தேசிய விருது!
fursat என்ற இந்தி படத்திற்காக இசையமைப்பாளர் விஷால் பரத்வாஜுக்கு சிறந்த இசையமைப்பிற்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
70வது தேசிய விருதுகள் வழங்கும் விழா தேசிய கீதத்துடன் துவங்கியது
70வது தேசிய விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.