தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"இப்படித்தான் உயிர் பிழைத்தோம்"- ராஷ்மிகா மந்தனாவின் திக்... திக்... பயண அனுபவம் என்ன? - ராஷ்மிகா மந்தனா ஏர் விஸ்தாரா

Rashmika Mandanna: மும்பையில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்த ஏர் விஸ்தாரா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், "இப்படித்தான் உயிர் பிழைத்தோம்" என நடிகை ராஷ்மீகா தனது பயண அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பதிவிட்டு உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 3:27 PM IST

Updated : Feb 19, 2024, 6:10 PM IST

ஐதராபாத் : ரியால்டி ஷோவில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்ற நடிகை ராஷ்மிக் மந்தனா, அங்கிருந்து ஏர் விஸ்தரா விமானத்தில் ஐதராபாத் நோக்கி திரும்பி உள்ளார். நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருக்கும் போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதை கவனித்த விமானி, துரிதமாக செயல்பட்டு மீண்டும் விமானத்தை மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார். இந்த விமானத்தில் நடிகைகள் ராஷ்மிக மந்தனா மற்றும் ஷரத்தா தாஸ் உள்ளிட்டோர் பயணித்து உள்ளனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் விமானம் குலுங்கிய போது இப்படித்தான் உயிர் பிழைத்தோம் என நடிகை ராஷ்மிக மந்தனா புகைப்படத்துடன் கூடிய ஸ்டோரியை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.

Rashmika Mandana Instagram Story

இரண்டு புகைப்படங்கள் ஒட்டியவாறு உள்ள அந்த ஸ்டோரியில் நடிகைகள் ரஷ்மிகா மந்தனா மற்றும் ஷரத்தா தாஸ் ஆகியோர் விமானம் குலுங்கிய போது முன் இருக்கையில் தங்களது கால்களை அழுத்திக் கொண்டவாறு உள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அண்மையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த அனிமல் திரைப்படம் வெளியாகி நல்ல வசூல் குவித்தது. அனிமல் பார்க் என சீக்குவல் படம் எடுக்க படக்குழு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில் ரன்பீக் கபூர் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் பல்வேறு படங்களை கைவசம் வைத்து உள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, விரைவில் வெளியாக உள்ள புஷ்பா இரண்டாம் பாகத்தின் முடிவை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறார். முன்னதாக டீப் பேக் வீடியோ விவகாரத்திலும் சிக்கி நடிகை ராஷ்மிகா மந்தனா பரபரப்பாக பேசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :தலையில் பந்து தாக்கி முஸ்தபிசுர் ரஹ்மான் காயம்! பயிற்சியின் போது விபரீதம்!

Last Updated : Feb 19, 2024, 6:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details