கோயம்புத்தூர்: சிங்காநல்லூரில் நடிகை ரம்பாவிற்கு சொந்தமான Magick Home நிறுவனத்தின் இரண்டாவது கிளையை நடிகை ரம்பா மற்றும் அவரது கணவரும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான இந்திரகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரம்பா கூறியதாவது, “Magick Home-யின் முதல் கிளை சென்னையில் செயல்பட்டு வருகிறது. அதன் இரண்டாவது கிளையை கோவையில் திறந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய சொந்த ஊரான ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அடுத்த கிளையை திறக்க இருக்கிறோம். வருகின்ற ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 30-க்கு மேற்பட்ட கிளைகள் திறக்க திட்டமிட்டுள்ளோம்.
2010-ம் ஆண்டு திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. அந்த காலத்தில் சினிமாவில் நடித்தது மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. தற்பொழுது தமிழ் சினிமாவில் நல்ல கதைகள் இல்லாததால் நடிகைகள் பிற மொழிகளில் நடிக்க செல்கின்றனர். தமிழ் சினிமாவில் பாகுபலி திரைப்படத்திற்கு அடுத்து எந்த விதமான கதையையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
உள்ளத்தை அள்ளித்தா படத்தில் வெளியான பாடல் தற்பொழுது ட்ரெண்டாகி வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அப்போது நடித்தது போல் கதைகள் தற்பொழுது தமிழ் சினிமாவில் இல்லை. பெண்களுக்கான நல்ல கதைகள் தமிழ் சினிமாவில் அமைவது இல்லை. வருங்காலத்தில் நல்ல கதைகள் அமைந்தால் கட்டாயமாக சினிமாவில் நடிப்பேன். நடிகர் விஜய் தன்னை சந்தித்தது குறித்து இன்னொரு நாள் தெரிவிப்பதாக கூறினார்.
மேலும், காமெடி நடிகர் யோகி பாபு வீட்டின் சமையலறைக்கு தனது நிறுவனம் தான் டிசைனிங் செய்துள்ளது. பல்வேறு பிரபலங்களுக்கும் டிசைனிங் செய்து வருகிறேன். தற்பொழுது இருக்கக்கூடிய பெண்கள் சமூக வலைதளங்களில் சமையலறை குறித்து யாரும் ரீல்ஸ் போடவில்லை. சண்டை போடுவது, சாப்பிடுவது போன்று தான் ரீல்ஸ்கள் பதிவிட்டு வருகின்றனர். அனைவரும் தங்கள் சமையலறைகளை ரசிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:'தங்கலான்' தங்கத்தை கண்டெடுக்கும் ஒரு போர்"; பா.ரஞ்சித் உடனான பணி அனுபவம் குறித்து விவரிக்கும் 'மினுக்கி' பாடலாசிரியர் உமாதேவி! - Thangalaan minikki lyricist umadevi