தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

“ஆரம்பிச்சாச்சு”..‘விடுதலை 2’ டப்பிங் பணிகள் தொடக்கம்! - VIDUTHALAI PART 2 DUBBING START

'விடுதலை 2' திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது

விடுதலை 2 படக்குழு
விடுதலை 2 படக்குழு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 7:17 PM IST

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த ‘விடுதலை’ முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையில் நல்ல வறவேற்பை பெற்றது. இப்பட்டத்தில், விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இவர்கள் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் உட்பட பலர் நடித்திருந்தனர்.

இப்பட்டத்தில் இளையராஜா இசையமைத்து பாடிய 'வழிநெடுக காட்டுமல்லி' பாடல் அனைவரையும் கவர்ந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் பலரால் பகிரப்பட்டு வந்தது. இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பாராட்டுக்களையும் குவித்தது. இதனைத் தொடர்ந்து, 'விடுதலை 2' எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். டிசம்பர் 20-ம் தேதி வெளியாக இருப்பதால், அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேகப்படுத்தி இருக்கிறார்கள். அதன்படி படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கியுள்ளதாக இயக்குநர் படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:விடுதலை பாகம் 2-ல் சூரிக்கு காட்சிகள் குறைவா? குமரேசன் கூறிய முக்கிய அப்டேட்!

இதுகுறித்து வெற்றிமாறன் பகிர்ந்து கொண்டதாவது, “திரைப்படங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது அதன் கதை சொல்லலுக்கு ஆத்மார்த்தமான உயிர் கொடுப்பது டப்பிங். இருப்பினும், 'விடுதலை 2' படத்தின் டப்பிங் தொடங்குவதற்கு முன்பே படத்தின் அழகையும், ஆன்மாவையும் எங்களால் உணர முடிந்தது. படத்தின் இறுதி வெளியீட்டை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். விரைவில், படத்தை பார்வையாளர்களும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம்" என்றார்.

படத்தின் இரண்டாம் பாகத்தின் டப்பிங் பணி தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ள நிலையில், அதனை நடிகர் விஜய் சேதுபதி புகைப்படங்களை பகிர்ந்து உறுதி செய்துள்ளார். படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்த பணிகள் இன்று துவங்கப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி மற்றும் சூரிக்கு இடையான காட்சிகளுக்கு டப்பிங் செய்யப்பட்டு வருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details