தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி, நித்யா மேனன்! - vijay sethupathi in pandiraj movie - VIJAY SETHUPATHI IN PANDIRAJ MOVIE

Vijay sethupathi in pandiraj movie: சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி, நித்யா மேனன்
பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி, நித்யா மேனன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2024, 8:01 PM IST

சென்னை: குடும்பத்துடன் ரசிக்கும் படங்களை இயக்குவதில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கிறார்.

1950கள் முதல் எம் ஜி ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், தனுஷ் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்த வெற்றி படங்களை தயாரித்துள்ள பாரம்பரியமிக்க தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் விஜய் சேதுபதி உடன் கைகோர்த்துள்ளது.

தனது அனைத்து படங்களிலும் குடும்ப உறவுகளின் சிக்கலை அழகாக காட்சிப்படுத்தும் இயக்குநர் பாண்டிராஜ் இம்முறை விஜய் சேதுபதி உடன் கைகோர்த்துள்ளார். மேலும் இப்படத்தில் சமீபத்தில் தேசிய விருது வென்ற நித்யா மேனன் நாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் நித்யா மேனன் விரைவில் பங்கேற்கிறார். இந்த திரைப்படத்தின் பெயர், இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ரஜினியை வைத்து நான் இயக்கிய படங்கள் மட்டும் தோல்வியா? பா.ரஞ்சித் கூறியது என்ன? - Pa ranjith

ABOUT THE AUTHOR

...view details