தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

குடியரசு தினத்திற்கு வெளியாகும் ’தளபதி 69’ ஃபர்ஸ்ட் லுக்... படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு - THALAPATHY 69 MOVIE UPDATE

'Thalapathy 69' Update: நடிகர் விஜய்யின் கடைசி படமான ’தளபதி 69’ இன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குடியரசு தினத்தன்று வெளியிடப்படுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விஜய், தளபதி 69 பட போஸ்டர்
விஜய், தளபதி 69 பட போஸ்டர் (Credits - @KvnProductions X account)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 24, 2025, 5:29 PM IST

Updated : Jan 24, 2025, 6:05 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய்யின் கடைசி படம் ’தளபதி 69’ என அவர் முன்பே அறிவித்திருந்தார். அரசியல் கட்சி துவங்கி முழுநேர அரசியல் பணிகளில் ஈடுபட இருப்பதால் இம்முடிவை எடுத்ததாக தெரிவித்தார். அதனால் 'தளபதி 69’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ’தளபதி 69’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு குடியரசு தினத்தன்று வெளியாவதாக அதன் தயாரிப்பு நிறுவனமான கேவின் புரொடக்‌ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

’தளபதி 69’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அறிவிப்பிற்காக வெளியிட்டுள்ள வீடியோவில் நடிகர் விஜய்யின் முதல் படமான ’நாளைய தீர்ப்பு’ போஸ்டரிலிருந்து இறுதியாக வெளிவந்த ’தி கோட்’ திரைப்படம் வரையிலான போஸ்டர்களை வேகமாக ஓட விட்டு வீடியோவின் இறுதியில் ’தளபதி 69’ ஃபர்ஸ்ட் லுக் ஜனவரி 26ஆம் தேதி முதல் என பதிவிட்டுள்ளார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக இந்த அப்டேட் பற்றி பலரும் இணையத்தில் எழுதி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்ற விவாதமும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் படத்திற்கு ’நாளைய தீர்ப்பு’ என தலைப்பு வைக்கப்படுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரைத்துறையினர் மத்தியில் கூறப்பட்டு வருகிறது.

’நாளைய தீர்ப்பு’ என்ற பெயரில் 1992ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம். எனவே அதனை நினைவுபடுத்தும் விதமாகவும் அவரது அரசியல் பயணத்தைக் குறிக்கும் விதமாகவும் இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த செய்திகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஹெச். வினோத் இயக்கும் இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தை கேவின் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் அரசியல் பயணத்திற்கு முன்பான கடைசி படம் என்பதால் கண்டிப்பாக அரசியல் கருத்துகள் அடங்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:திரைப்படத் தலைப்பிற்கு பஞ்சமா?... 'பராசக்தி' தலைப்பை பயன்படுத்த சிவகார்த்திகேயன் படத்திற்கு எதிர்ப்பு!

இந்நிலையில் ’தளபதி 69’ படமானது தெலுங்கில் வெளிவந்த நடிகர் பாலைய்யாவின் ’பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் ரிமேக் என்ற யுகமும் இணையத்தில் பேசப்பட்டு வந்தது. இது தொடர்பாக பகவந்த் கேசரி திரைப்படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி அவரது புதிய படமான ’சங்க்ராந்திக்கு வஸ்துன்னம்’ பட விழாவில் பேசியிருந்தார்.

அதில் தான் நடிகர் விஜய்யிடம் நேரில் பேசியதாகவும் அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடலை தற்போது சொல்ல முடியாது எனவும், நேரம் வருகிற போது கண்டிப்பாக அது பற்றி வெளியில் சொல்வோம் எனவும் கூறியிருந்தார் இயக்குநர் அனில் ரவிபுடி. அதே விழாவில் பேசிய நடிகர் விடிவி கணேஷ் ’பகவந்த் கேசரி’ திரைப்படத்தை நடிகர் விஜய் ஐந்து முறைக்கு மேல் பார்த்தார் எனவும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது எனவும் தெரிவித்திருந்தார்.

இயக்குநர் ஹெச்.வினோத்தால் நடிகர் கமல்ஹாசனுக்கு சொல்லப்பட்ட கதைதான் தற்போது விஜய்யை வைத்து திரைப்படமாக உருவாகியுள்ளது என இதற்கு முன்பு பேசப்பட்டு வந்தது. ஆனால் அதுவாக இருக்குமா எனவும் தெரியவில்லை. ஆனால் முதலில் வெளியிடப்பட்ட அறிவிப்பு போஸ்டரில் ஆக மொத்தத்தில் இத்திரைப்படம் குறித்த யுகங்களும் எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Last Updated : Jan 24, 2025, 6:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details