சென்னை: இயக்குநர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர் வசந்த் ரவி நடித்திருக்கும் திரைப்படம் வெப்பன். இப்படம் ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மேலும், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையது சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலுபிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரேம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி, வினோதினி வைத்தியநாதன், மேக்னா சுமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி கிருஷ்ணா எடிட்டிங் பணிகளையும், கலை இயக்கத்தை சுபேந்தரும், சண்டைக் காட்சிகளை சுதேஷ் கையாண்டுள்ளனர்.
இந்நிலையில், படம் குறித்து நடிகர் வசந்த் ரவி கூறும்போது, "வெப்பன் திரைப்படத்தின் விஷுவல் புரோமோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு எங்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. படத்தையும் பார்வையாளர்கள் பாராட்டுவார்கள் என்று முழுமையாக நம்புகிறோம்.